குடிமக்கள் அல்லாதாருக்குப் பிறப்புச் சான்றிதழ் - எம்ஏசிசி விசாரணை நடத்துகிறது!

- Muthu Kumar
- 13 Mar, 2025
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13-
போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி குடிமக்கள் அல்லாதாரை மலேசிய குடிமக்கள் எனப் பதிவுசெய்து வரும் கும்பலின் நடவடிக்கை குறித்து மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை நடத்தி வருகிறது. ஓப் அவுட்லேண்டர் மற்றும் ஓப் பெர்த் எனும் குறியீட்டுப் பெயர்களில் இரண்டு விசாரணை நடவடிக்கைகளை எம்ஏசிசி தொடங்கியுள்ளது என்று அந்த ஆணையத்தின் துணைத் தலைவர் (நடவடிக்கைகள்) அமாட் குசாய்ரி யஹாயா தெரிவித்தார்.
ஜொகூரிலும் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் கிளினிக்குகள் மற்றும் சட்ட நிறுவனங்கள் உட்பட பல வளாகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஓப் அவுட்லேண்டர் நடவடிக்கையில் முக்கிய சந்தேகப் பேர்வழியாக சிக்கியவர் ஓர் அரசு ஊழியர் ஆவார். குழந்தைப் பேற்றை பதிவு செய்வதில் ஏற்படும் தாமதம், குழந்தை பிறந்து அறுபது நாட்கள் கடந்த பின்னரே அது பற்றி தெரிவிப்பது போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அந்நபர் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
“டத்தோஸ்ரீ” எனும் பட்டத்தை வைத்துள்ள மருத்துவர் ஒருவர் இக்கும்பலுக்கு பின்புலமாக இருந்து செயயல்பட்டுள்ளார். அந்நபர் பல கிளினிக்குகளுக்கும் மகப்பேறு மையங்களுக்கும் சொந்தக்காரர் ஆவார் மகப்பேற்றைச் உறுதிப்படுத்தும் போலி ஆவணங்கள் வெளியிடப்பட்டதற்கு அவர்தான் காரணகர்த்தாவாக இருந்துள்ளார் என்றார் அவர்.
ஓப் பெர்த் நடவடிக்கையில் மூன்று சந்தேகப் பேர்வழிகள் சிக்கினர். இடைத்தரகர்களாகச் செயல்பட்ட அம்மூவரும் மருத்துவமனைகளில் இருந்து போலி பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவற்காக அந்த அரசு ஊழியருக்கு பதினெட்டாயிரம் வெள்ளி வரை கையூட்டு கொடுத்துள்ளனர் என்று குசாய்ரி கூறினார்.
இந்த இடைத்தரகர்களின் சேவையை நாடிய ஆறு விண்ணப்பதாரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இடைத் தரகர்களுக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கும் இடைத்தரகராகச் செயல்பட்ட வழக்கறிஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று குசாய்ரி குறிப்பிட்டார்.
SPRM menyiasat sindiket menggunakan dokumen palsu untuk mendaftarkan bukan warganegara sebagai rakyat Malaysia. Operasi di Johor dan Klang mendapati seorang pegawai kerajaan dan doktor berpangkat “Datuk Seri” terlibat. Beberapa orang, termasuk perantara dan peguam, telah ditahan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *