7 வீடுகள் தீயில் கருகின! ஓடுவர் படுகாயம்!

top-news

மார்ச் 8,

இன்று காலை Taman Alam Perdana குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் தீயில் கருகியதாகவும் ஆடவர் ஒருவரின் இரு கைகளும் தீயில் கருகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   திரங்கானுவில் உள்ள Taman Alam Perdana பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகக் காலை 7.30 மணிக்கு அவசர அழைப்புக் கிடைத்ததாக CHUKAI மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Hanif Che Khalid தெரிவித்தார்.

25 தீயணைப்பு வீரர்களுடன் தீ பரவியிருந்த 7 வீடுகளிலும் தீயைக் கட்டுப்படுத்தியதாகவும் 43 வயது ஆடவரின் இரு கைகளும் தீயில் கருகியதாகவும் Hanif Che Khalid தெரிவித்தார். இத்தீவிபத்தால் 7 வீடுகளும் 3 கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் கருகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tujuh rumah di Taman Alam Perdana, Binjal yang terbakar dalam kejadian pagi tadi mengakibatkan seorang lelaki melecur di tangan. Tiga kereta dan sebuah motosikal turut musnah. Bomba berjaya mengawal api dalam 50 minit, dan punca kejadian masih disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *