விபத்தில் மனைவி பலி! கணவரும் 2 குழந்தைகளும் படுகாயம்!

top-news

மார்ச் 10,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் கூலாய் அருகில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் சறுக்கி விபத்துக்குள்ளானதில் 29 வயது பெண் உயிரிழந்ததுடன் அவரின் கணவரான 30 வயது ஆடவரும் 2 குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர். மாலை 5.19 மணிக்கு விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதாகவும் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு 10 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டதாகவும் கூலாய் மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர்  Asmiza Zaini தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான Perodua Axia வாகனத்தில் இருந்த 29 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் வாகனத்தைச் செலுத்திய 30 வயது ஆடவரும் பின் இருக்கையில் இருந்த 4 வயது பெண் சிறுமியும், 3 மாதக் குழந்தையும் படுகாயம் அடைந்த நிலையில் கூலாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூலாய் மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர்  Asmiza Zaini தெரிவித்தார். விபத்துக்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang wanita maut manakala tiga lagi cedera termasuk dua kanak-kanak selepas Perodua Axia terbabas dan terbalik di Kilometer 39.9 Lebuhraya PLUS arah selatan. Pasukan bomba menyelamat mangsa tersepit sementara punca kemalangan masih dalam siasatan pihak berkuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *