அபாயகரமாக வாகனத்தைச் செலுத்திய முதியவர் கைது!

top-news

மார்ச் 10,

சமூகவலைத்தலத்தில் அபாயகரமாக வாகனத்தைச் செலுத்துவது போன்ற காணொலி பரவியதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட வாகனமோட்டியான 65 வயது முதியவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக Batu Pahat, மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார். காணொலியில் முன்னே சென்ற லாரியை முந்தும் போது எதிரில் வந்த வாகனத்தில் மோதுபடி, அபாயகரமாக வாகனத்தைச் செலுத்தினாலும் எதிரில் வந்த வாகனமோட்டி சுதாரித்து வாகனத்தை நிறுத்தியதால் விபத்து ஏற்படுவதைத் தவிர்த்ததாகத் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் நேற்று காலை 8.19 மணிக்குப் பத்து பஹாட் சாலையில் நிகழ்ந்ததாகவும் பாதிக்கப்பட்ட வாகனமோட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்ததும் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்திய 65 வயது முதியவர் மாலை 4.10 மணிக்கு Taman Cemerlang பகுதியில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டதாகப் Batu Pahat, மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 65 வயது முதியவர் மீது எந்தவொரு குற்றப்பதிவுகளும் இல்லை என்றாலும் அவரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Polis menahan lelaki warga emas berusia 65 tahun yang memandu secara melulu di Jalan Sri Bengkal-Parit Yaani, Batu Pahat. Suspek ditahan dalam masa 24 jam selepas videonya tular di media sosial.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *