பகாங், திரங்கானு, கிளாந்தானில் அடைமழை தொடரும்!

top-news

மார்ச் 8,

தீபகற்ப மலேசியாவில் பகாங், கிளாந்தான், திரங்கானு மாநிலங்களில் 12 மார்ச் வரையில் அடைமழை தொடரும் என தேசிய வானிலை ஆய்வு மையமான Met Malaysia எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று முதல் கிழக்கு கடற்கரையைச் சார்ந்த 3 மாநிலங்களிலும் புயலுடன் கூடய மழை பெய்யும் என்றும் நீர்நிலைகளின் நீர்மட்டம் உயரும் என்றும் Met Malaysia எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசமான வானிலையால் பாதிக்கப்படும் பகாங், கிளாந்தான், திரங்கானு மாநிலங்களில் மீட்பு ஆணைய அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் பாதிக்கப்படும் கிராமங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பானப் பகுதிக்கு இடம்பெயர்த்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சம்மந்தப்பட்ட மாநிலங்களின் நீர்நிலைகளில் நீர் மட்டத்தைக் கண்காணித்து வருவதாகவும் Met Malaysia தெரிவித்துள்ளது.

Met Malaysia meramalkan hujan lebat berterusan di Pahang, Kelantan, dan Terengganu sehingga 12 Mac. Pihak berkuasa bersiap sedia bagi kemungkinan banjir, dengan pemindahan penduduk terjejas sedang dilakukan. Paras air di kawasan berisiko dipantau secara berterusan untuk keselamatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *