புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பும் திட்டத்தை நீட்டிக்கும் குடிநுழைவுத் துறை!

- Muthu Kumar
- 16 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 16-
வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைய திட்டமிடப்பட்ட புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பும் திட்டத்தை நீட்டிக்கும் செயல்முறையில் குடிநுழைவுத் துறை ஈடுபட்டுள்ளது.
குடிநுழைவுத்துறை தரப்பு சட்டவிரோத குடியேறிகள் மீது வழக்கு தொடர்வதைக் காட்டிலும் அபராதம் விதிக்கும் அணுகுமுறையை அமல்படுத்த தேசிய சட்டத்துறையிடம் ஒப்புதலை பெற்று வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நகத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
சட்டவிரோதக் குடியேறிகளுக்கு மனிதாபிமான அடிப்படையிலும் நோன்பு பெருநாளை முன்னிட்டு சொந்த நாடுகளுக்குத் திரும்ப வாய்ப்பு வழங்குவதற்கும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ சைஃபுடின் கூறினார்.
இத்திட்டத்தின் கீழ், குடிநுழைவுத் துறை சட்டத்தின் கீழ் குற்றங்களைப் புரிந்த வெளிநாட்டினர் நாடு திரும்புவதற்கு முன்னதாக அபராத தொகையைச் செலுத்த வேண்டும்.கடந்தாண்டு புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பும் திட்டத்தின் வழி 12 கோடி ரிங்கிட் தொகையை அரசாங்கம் வசூலித்ததாக அவர் தெரிவித்தார்.
Jabatan Imigresen Malaysia sedang mempertimbangkan lanjutan program pemulangan pendatang tanpa izin yang dijadual tamat pada 31 Mac. Pendekatan denda diutamakan berbanding pendakwaan, dengan pertimbangan kemanusiaan sempena Aidilfitri. Tahun lalu, kerajaan mengutip RM120 juta melalui program ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *