அருண் துரைசாமிக்கு எதிராக விசாரணை அறிக்கை திறப்பு!

- Muthu Kumar
- 14 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 14-
அண்மையில் தமது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்த ஒரு காணொளி மூலம், தேச நிந்தனைக்குரிய அறிக்கையை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்படும் அருண் துரைசாமிக்கு எதிராக போலீசார் விசாரணை அறிக்கை ஒன்றை திறந்திருக்கின்றனர்.
அக்காணொளி தொடர்பில் பினாங்கின் பத்து காவானில் போலீசார் ஒரு புகாரைப் பெற்றிருப்பதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் ரஸாருடின் உசேன் தெரிவித்தார்.
அக்காணொளியில் அருண் துரைசாமியின், இனம், சமயம் மற்றும் அரசக் குடும்பம் (3ஆர்) விவகாரம் தொட்டு நிந்தனைக்குரிய அறிக்கை இடம் பெற்றிருப்பதாகவும் அக்காணொளியில் பிரதமர் மற்றும் பாதுகாப்புத் தரப்பு பற்றியும் அவர் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “ஸம்ரி விநோத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இந்து மக்கள் உட்பட தாமும் மலேசிய இந்து ஆகம அணியும் வீதியில் திரளப் போவதாக அந்நபர் கூறியிருக்கின்றார்.
“இதனைத் தொடர்ந்து, தேச நிந்தனைச் சட்டத்தின் செக்ஷன் 4(1), குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 505(சி) மற்றும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்முனை தகவல் சட்டத்தின் செக்ஷன் 233இன் கீழ் நாங்கள் விசாரணை அறிக்கை ஒன்றைத் திறந்திருக்கின்றோம்" என்று ரஸாருடின் கூறினார்.
இந்து மதத்தை இழிவாகப் பேசி அறிக்கை ஒன்றை சுயேச்சை மதப் போதகர் ஸம்ரி விநோத் வெளியிட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, அருண் அத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பதாக நம்பப்படுகிறது. ஸம்ரிக்கு எதிராக போலீசார் தாமதமாக நடவடிக்கையை எடுப்பதாகவும் அருண் கூறியிருந்தார்.
Polis membuka kertas siasatan terhadap Arun Thuraisamy susulan video Instagram yang didakwa berbaur penghinaan terhadap isu kaum, agama, dan institusi diraja. Beliau juga mengancam demonstrasi jika tindakan tidak diambil terhadap Samri Vinoth. Kes disiasat di bawah beberapa akta berkaitan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *