வெ.12 லட்சம் மதிப்புள்ள தேங்காய்கள் பறிமுதல்!

- Muthu Kumar
- 10 Mar, 2025
கோத்தா பாரு, மார்ச் 10
கிளந்தானின் தும்பாட், ஜாலான் கஸ்பானில் உள்ள ஒரு சட்டவிரோத படகுத் துறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 லட்சம் வெள்ளி மதிப்புள்ள தேங்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு கிடங்கிலிருந்து கைப்பற்றப்பட்ட மொத்தம் 42,700 தேங்காய்கள் தாய்லாந்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்ததாக, பொது நடவடிக்கைப் படை அதிகாரி நிக் ரோஸ் அஸ்ஹான் தெரிவித்தார்.
''சம்பந்தப்பட்ட சட்டவிரோத படக்குத்துறையின் கிடங்கில். அந்த தேங்காய்களை கடத்திய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்ட பின்னர் அத்தேங்காய்களை தாய்லாந்துக்குக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது."அக்கிடங்கில் நாங்கள் சோதனை செய்தபோது. தாய்லாந்துக்குச் செல்லத் தயாராக இருந்ததாக நம்பப்படும். அக்கிடங்கினுள் இருந்த ஒரு நீண்ட லோரியில் 42,700 தேங்காய்கள் இருந்ததை நாங்கள் கண்டு பிடித்தோம்.
கைது செய்யப்பட்டுள்ள மூவரில், 22 மற்றும் 38 வயதுடைய இருவர் அந்த தேங்காய்களை தாய்லாந்துக்கு கடத்திச் செல்ல தயாராக இருந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் நிக் ரோஸ் தெரிவித்தார்.இச்சம்பவத்தில் அந்த லோரியும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கைதான மூவரும், மேல் நடவடிக்கைக்காக பொது நடவடிக்கைப் படை தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தானா மேராவுக்கு அருகிலுள்ள லாலாங் பெபூயூவில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒரு சாலைத் தடுப்பு நடவடிக்கையில், 12,600 வெள்ளி மதிப்புள்ள வீட்டு அலங்காரச் செடிகள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.
PGA merampas 42,700 biji kelapa bernilai RM1.2 juta yang disorok di gudang haram di Tumpat, Kelantan, dipercayai untuk diseludup ke Thailand. Tiga individu ditahan, dan sebuah lori turut dirampas. Selain itu, hiasan pokok bernilai RM12,600 juga disita dalam sekatan jalan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *