தக்காளி லாரி சாலையில் கவிழ்ந்தது!

top-news
FREE WEBSITE AD

அலோர் ஸ்டார், மார்ச் 9: பென்டாங் அருகே தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (பிளஸ்) KM71.4 இல் தக்காளியை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் தக்காளிப்பழங்கள் சாலையில் உருண்டோடின.

பிளஸ் போக்குவரத்து கண்காணிப்பு மையம் காலை 10.30 மணியளவில் இந்த விபத்து குறித்து தகவல் அளித்ததாக பென்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் ரோட்ஸி அபு ஹாசன்,  தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், இந்த விபத்தில் ஒரு இழுவை லாரியும் ஒரு லாரியும் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. சாங்லூனில் இருந்து சிலாங்கூர், செலாயாங்கிற்கு  லாரியை இழுத்துச் செல்லும் போது இது நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

இதனால் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Sebuah lori membawa tomato terbalik di KM71.4 Lebuhraya PLUS berhampiran Pendang, menyebabkan buah bertaburan di jalan. Insiden yang melibatkan sebuah lori dan kenderaan penunda ini menyebabkan kesesakan lalu lintas sepanjang enam kilometer. Pihak berkuasa sedang menyiasat kejadian tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *