சிற்றுண்டிச் சாலைக்கு நடந்து சென்ற 2ஆம் படிவ மாணவன் மயக்கமுற்று மரணம்!

- Muthu Kumar
- 16 Mar, 2025
மலாக்கா, மார்ச் 16-
திடலுக்கு அருகிலுள்ள சிற்றுண்டிச் சாலைக்கு சென்ற இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 2ஆம் படிவ மாணவன் மயக்கமுற்றதைத் தொடர்ந்து மரணமடைந்து விட்டான். இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு ஓய்வு நேரத்திற்கு வந்த போது நிகழ்ந்ததாக மலாக்கா தெஙா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்தபர் பாதிட் தெரிவித்தார்.
சம்பவத்திற்கு முன்பு 14 வயதுடைய அம்மாணவன் கைப்பந்து வகுப்பிற்குச் சென்றான். இதுகுறித்து மேற்கொண்ட தொடக்கக்கட்ட விசாரணைப்படி பள்ளித் திடலுக்கு அருகில் மயக்கமடைந்து கீழே
விழுவதற்கு முன்பு அம்மாணவன் சிற்றுண்டிச் சாலைக்கு நடந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுவனுக்குச் சுவாச உதவி 30 நிமிடத்திற்கு வழங்கப்பட்டது. இருந்த போதிலும் எந்த பயனுமின்றி அம்மாணவன் மரணமடைந்து விட்டதை அவனுக்குச் சிகிச்சையளித்த மருத்துவர் உறுதிப்படுத்தினார்.
இம்மாணவன் உண்மையில் பள்ளி கைப்பந்து போட்டியில் தீவிர ஈடுபாடு கொண்டவனாவான். மாணவனின் மரணச் சம்பவத்தில் எந்த குற்றச்செயல் அம்சமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது ஒரு திடீர் மரணச் சம்பவமாக வகைப்படுத்தப்படுவதாகச் செய்தியாளர்களிடம் பேசிய போது ஏசிபி கிறிஸ்தபர் பாதிட் குறிப்பிட்டார்.
Seorang pelajar Tingkatan 2 meninggal dunia selepas rebah berhampiran kantin sekolah di Melaka. Pelajar berusia 14 tahun itu sebelum ini menghadiri kelas bola baling. Doktor mengesahkan kematiannya, dan polis mengklasifikasikan kes ini sebagai kematian mengejut tanpa unsur jenayah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *