மலிவு விற்பனைத் திட்டத்தை அரசாங்கம் விரிவுபடுத்தும்!

- Muthu Kumar
- 12 Mar, 2025
கோலாலம்பூர்,மார்ச் 12-
நோன்பு பெருநாளுக்கு முன்னதாக, மக்கள் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற உதவும் வகையில் அரசாங்கம் மலிவு விற்பனைத் திட்டத்தை விரிவுபடுத்தும்.
அதில் மடானி விற்பனைத் திட்டம்,விவசாய சந்தையில் பெருநாளுக்கு முந்தைய விற்பனைத் திட்டம் மற்றும் AGRO மடானி விற்பனைத் திட்டம் ஆகியவை அடங்கும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
அரிசி, தேங்காய், கோழி, கோழி முட்டை உட்பட 11 முக்கிய உணவுப் பொருள்களின் விநியோகம் அனைத்து ரமலான், நோன்பு பெருநாள் தயாரிப்புகளுக்குப் போதுமானதாக இருக்கும் என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு, கேபிகேஎம் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
அதோடு, 2025ஆம் ஆண்டு வாழ்க்கை செலவினத்திற்கான தேசிய நடவடிக்கை மன்ற நிர்வாக செயற்குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்களில் இதுவும் ஒன்றாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி, அதன் துணை அமைச்சர் ஃபுசியா சாலே உட்பட அமைச்சின் மூத்த அதிகாரி, மாநில அரசாங்க பிரதிநிதிகள். தொழில்துறை தரப்பு. அரசு சார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்தோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
Kerajaan memperluas program jualan murah menjelang Aidilfitri, termasuk Jualan Madani dan Agro Madani, bagi memastikan bekalan 11 barangan keperluan utama mencukupi. Perkara ini dibincangkan dalam mesyuarat tindakan kos sara hidup negara, dengan penyertaan wakil kerajaan, industri, dan NGO.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *