Masjid Jamek LRT நிலைய சுவர் இடிந்து விழுந்தது! Rapid Rail மன்னிப்பு!

- Sangeetha K Loganathan
- 13 Mar, 2025
மார்ச் 13,
தலைநகர் Masjid Jamek LRT நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்தது எதிர்பாராத சம்பவம் என Rapid Rail நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு Masjid Jamek LRT நிலையத்தின் மேல்மாடி நடைப்பாதையில் உள்ள கோன்கிரீட் சுவர் இடிந்து விழுந்ததில் பயணிகள் எவரும் பாதிக்கப்படவில்லை என்றும் இச்சம்பவத்திற்கு Rapid Rail நிறுவனம் மன்னிப்புக் கோரியது மட்டுமின்றி பொறுப்பேற்பதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் Rapid Rail நிறுவனம் தலைநகரின் முக்கிய LRT நிலையங்களில் பாதுகாப்பு மேல்நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் மீண்டும் தற்போது அனைத்து LRT நிலையங்களிலும் பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தால் Masjid Jamek LRT நிலையத்தின் கட்டிடத்தின் கட்டமைக்குப் பெரிய சேதம் ஏதுமில்லை என சோதனையில் தெரிய வந்துள்ளது.
Panel dinding di Stesen LRT Masjid Jamek runtuh sekitar jam 4.04 petang akibat hujan lebat. Rapid Rail mengesahkan tiada kemalangan jiwa atau kerosakan besar dan perkhidmatan tren berjalan seperti biasa. Kerja pembersihan serta siasatan punca kejadian sedang dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *