2 மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் மாணவர் பலி! மற்றொருவர் படுகாயம்!

top-news

மார்ச் 14,

நேற்றிரவு 2 மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் 15 வயது பள்ளி மாணவர் உயிரிழந்ததுடன் 18 வயது இளைஞர் படுகாயம் அடைந்தார். இரவு 10 மணிக்கு விபத்துக் குறித்தான அவசர அழைப்புப் பெற்றதாக Alor Gajah, மாவட்டக் காவல் ஆணையர் Ashari Abu Samah தெரிவித்தார். 

அலோர் காஜாவிலிருந்து Jalan Taman Kelisa நோக்கி செல்லும் சாலையில் பின்னிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயது Alif Ramadani Ramli எனும் மாணவர் உயிரிழந்ததாகவும் 18 வயது மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம் அடைந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. படுகாயம் அடைந்துள்ள 18 வயது இளைஞர் Alor Gajah மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையைத் தொடர்வதாக Alor Gajah, மாவட்டக் காவல் ஆணையர் Ashari Abu Samah தெரிவித்தார்.

Seorang pelajar sekolah maut manakala seorang lagi cedera selepas motosikal mereka bertembung di Jalan Taman Kelisa, Kuala Sungai Baru. Mangsa meninggal di lokasi manakala penunggang berusia 18 tahun cedera dan menerima rawatan di Hospital Alor Gajah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *