பள்ளியில் மயங்கி விழுந்த 14 வயது மாணவர் மரணம்!

- Sangeetha K Loganathan
- 15 Mar, 2025
மார்ச் 15,
மலாக்காவில் உள்ள இடைநிலைப்பள்ளியில் பயிலும் 14 வயது மாணவன் சிற்றுண்டிச் சாலைக்குச் செல்லும் வழியில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக மத்திய மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். காலை 10.30 மணிக்குப் பள்ளியிலிருந்து அழைப்புக் கிடைத்த நிலையில் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
மயங்கி விழுந்த 14 வயது மாணவர் காலையில் கைப்பந்து பயிற்சியின் போது திடகாத்திரமாக இருந்ததாகவும் திடீர் மயக்கத்தின் விளைவால் அவர் மயங்கி விழுந்ததாகவும் நம்பப்பட்ட நிலையில் முதலுதவிகள் வழங்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக Christopher Patit தெரிவித்தார். சம்மந்தப்பட்ட பகுதியில் எந்தவொரு குற்றவியல் சம்பவங்களுக்கானத் தடயங்களும் இல்லை என்பதைக் காவல் துறையினர் உறுதிப்படுத்தினர்.
Seorang pelajar lelaki tingkatan dua di Melaka meninggal dunia selepas pengsan ketika berjalan ke kantin sekolah. Dia dikejarkan ke hospital, namun gagal diselamatkan. Polis mengklasifikasikan kes sebagai mati mengejut sementara menunggu laporan makmal bagi menentukan punca kematian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *