விமான நிலையத்தில் Sim Card விற்கும் வெளிநாட்டுக் கும்பல் கைது!

- Sangeetha K Loganathan
- 12 Mar, 2025
மார்ச் 12,
வெளிநாட்டிலிருந்து மலேசியாவுக்கு வரும் சுற்றுப்பயணிகளிடம் விமான நிலையத்திற்குள் தொலைப்பேசிக்கான Sim Card-களை விற்பனை செய்த 9 பேரைக் குடிநுழைவுத் துறையினர் கைது செய்தனர். மலேசியாவுக்கு வரும் வெளிநாட்டினர்கள் அவர்களின் விவரங்களைப் பதிவு செய்யாமல் மூன்றாம் நபர் மூலமாகப் பெறும் சிம்கார்ட்டுகள் போலி அடையாளங்களுடன் பயன்படுத்தப்படுவதால் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 9 பேரும் Bangladesh நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் மூவர் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருப்பதாகவும் இருவர் சுற்றுலா விசாவில் மலேசியாவில் இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 9 Bangladesh ஆடவர்களும் Putrajaya குடிநுழைவுத் துறை தடுப்புக் காவலில் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sembilan warga Bangladesh ditahan di lapangan terbang kerana menjual Sim Card kepada pelancong tanpa pendaftaran rasmi. Aktiviti ini melibatkan penggunaan identiti palsu. Dua suspek memiliki visa pelancong manakala tiga lagi tinggal secara haram. Semua suspek ditahan di Putrajaya untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *