RM 1.4 மில்லியன் மதிப்பிலானக் கடத்தல் பட்டாசுகளுடன் ஆடவர் கைது!

top-news

மார்ச் 16,

சட்டவிரோதமாகக் கடத்தல் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டார். Tumpat சாலையின் எல்லை பகுதியில் சந்தேகத்திற்குரிய லாரியைச் சோதனையிட்ட போது உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக PGA எல்லை பாதுகாப்பு சிறப்புப் படையின் இயக்குநர் DATUK NIK ROS AZHAM NIK தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு RM 1.4 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 


மாலை 6.45 மணியளவில் தும்பாட் KAMPUNG BUNOHAN சாலையில் சந்தேகத்திற்குரிய லாரியிலிருந்து பட்டாசு பெட்டிகளைப் பறிமுதல் செய்ததாகவும், சம்மந்தப்பட்ட பட்டாசுகளுக்கு முறையான ஆவணங்களையும் உரிமங்களையும் லாரி ஓட்டுநர் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 31 வயது லாரி ஓட்டுநர் சம்மந்தப்பட்ட பட்டாசுகளை அண்டை நாட்டிலிருந்து மலேசியாவிற்குச் சட்டவிரோதமாக வரி செலுத்தாமல் கொண்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


PGA Briged Tenggara merampas mercun dan bunga api bernilai RM1.4 juta dalam serbuan di Kampung Bunohan, Tumpat. Seorang lelaki tempatan berusia 31 tahun ditahan selepas didapati menyeludup mercun tanpa dokumen sah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *