PUTRA HEIGHTS வெடிப்பின் விசாரணையில் யாரையும் பாதுகாக்க கூடாது! பாஸ் கட்சி வலியுறுத்து!
.jpg)
- Sangeetha K Loganathan
- 05 Apr, 2025
ஏப்ரல் 5.
PUTRA HEIGHTS எரிவாயு குழாய் வெடிப்புத் தொடர்பான விசாரணையை விரைவுப்படுத்தும்படிபும் நேர்மையான வெளிப்படையான விசாரணையில் எந்த தரப்பினரையும் பாதுக்காக்கும் வகையில் இருக்க கூடாது என்றும் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் Datuk Seri Takiyuddin Hassan வலியுறுத்தினார். எரிவாயு குழாய் வெடிப்புக்கான முழுமையான விசாரணையில் பாஸ் கட்சி நம்பிக்கையுடன் இருப்பதாகவும் எந்தவொரு நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் பாதுகாக்கப்பட கூடாது என்றும் அவர் நினைவுருத்தினார்.
வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்களுக்குப் பாஸ் கட்சி துணை நிற்கும் என்றும் நிவாரண மையங்களில் வசதிகள் குறைபாடுகள் இல்லாமல் அரசாங்கம் செயல்பட பாஸ் கட்சி ஒத்துழைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த எரிவாயு குழாய் வெடிப்பை முன்மாதிரியாகக் கொண்டு நாட்டின் மற்ற குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலுள்ள எரிவாயு குழாய்களின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் Datuk Seri Takiyuddin Hassan வலியுறுத்தினார். எரிவாயு குழாய் வெடிப்பிற்கான விசாரணையில் சம்மந்தப்பட்டுள்ள நிறுவனங்கள் அரசு அமைப்புகள் என விசாரணையின் முழுமையான நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என பாஸ் கட்சி விரும்புவதாக அவர் நினைவுருத்தினார்.
Siasatan menyeluruh, profesional, dan telus diperlukan bagi kebakaran serta letupan saluran gas di Putra Heights. Ketua Whip PN, Datuk Seri Takiyuddin Hassan menegaskan ketelusan maklumat penting untuk kepentingan awam. PN menolak perlindungan pihak tertentu dan menyeru bantuan berterusan kepada mangsa, termasuk pampasan dan sokongan psikologi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *