சிலாங்கூரில் கடுமையானப் புயல்! 30 வீடுகள் சேதம்!

- Sangeetha K Loganathan
- 12 Mar, 2025
மார்ச் 12,
நேற்று மாலை சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பல மாவட்டங்கள் சேதமடைந்த நிலையில் Sekinchan மாவட்டத்தில் 30 மேற்பட்ட வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழையுடன் கடுமையானப் புயல் தாக்கியதாக Sabak Bernam மாவட்டப் பேரிடர் ஆணைய இயக்குநர் Ali Sadikin Sadin தெரிவித்தார்.
மாலை 4.50 மணிக்கு Sekinchan பகுதியில் உள்ள Taman Ria குடியிருப்புப் பகுதிக்கு பேரிடர் ஆணைய அதிகாரிகளுடன் விரைந்ததாகவும் பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்த மக்களை மீட்டு பாதுகாப்பானப் பகுதிக்கு அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது வரையில் சுமார் 30 வீடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில் துப்புரவுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த மார்ச் 6 ஆம் நாள் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட Sekinchan பகுதி மக்கள் தற்போது இரண்டாவது முறையும் புயலால் பாதிக்கப்பட்டிருப்பதாக Sabak Bernam மாவட்டப் பேரிடர் ஆணைய இயக்குநர் Ali Sadikin Sadin தெரிவித்தார்.
Hampir 30 rumah di Taman Ria, Sekinchan terjejas akibat ribut hari ini. Pusat pemindahan sementara di Dewan Seri Sekinchan diaktifkan pada 4.50 petang untuk mangsa. Pihak berkuasa menyediakan bantuan segera dan menasihatkan orang ramai agar berwaspada.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *