பெருநாளை முன்னிட்டு பொருட்களின் விலை கண்காணிக்கப்படும்!

- Muthu Kumar
- 12 Mar, 2025
ஷா ஆலம், மார்ச் 12-
நோன்புப் பெருநாளை முன்னிட்டு குறிப்பாக விழாக்கால உச்சவரம்பு விலைத் திட்டத்தின் கீழ் உள்ள பொருட்கள் மீது மாநில அரசு விலைக் கண்காணிப்பை தொடர்ந்து மேற்கொள்ளும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை பயனீட்டாளர்களுக்கு சுமையாக இல்லாதிருப்பதை உறுதி செய்வதற்காக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகப் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.
ஒவ்வொரு முறையும் பெருநாள் நெருங்கும்போது, குறிப்பாக அதிக தேவை உள்ள பொருட்களின் விலையை நாங்கள் கண்காணிக்கிறோம். இந்த கண்காணிப்பில் பல்பொருள் விற்பனை மையங்களும் அடங்கும்.வணிகர்கள் தாங்கள் விற்பனை செய்யும் பொருள்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருப்பதை உறுதி செய்யுமாறு நாங்கள் நினைவூட்டுகிறோம்.
வாடிக்கையாளர்கள் அதிக விலையால் சுமையை எதிர்நோக்குவதைக் காண நாங்கள் விரும்பவில்லை என்று டத்தோ ரிஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.ஆகவே, அத்தியாவசியப் பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் அல்லது மிக அதிகமாக விற்பனை செய்யும் வணிகர்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
புகார்களை நேரடியாக உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு அல்லது பயனீட்டாளர் விவகார ஆட்சிக்குழு, உள்ளூர் அமலாக்க தரப்பிடம் தெரிவிக்கலாம். இந்த நடவடிக்கை ரமலான் விற்பனை சந்தைக்கும் பொருந்தும் என்று அவர் கூறினார்.
Kerajaan negeri Selangor akan terus memantau harga barangan keperluan di bawah Skim Harga Maksimum musim perayaan. Langkah ini memastikan harga tidak membebankan pengguna. Peniaga diingatkan mematuhi harga yang ditetapkan, dan pengguna digalakkan melaporkan sebarang ketidakpatuhan kepada pihak berkuasa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *