கலவரத்தை ஏற்படுத்திய 13 வெளிநாட்டினர் கைது!

top-news

மார்ச் 15,

கும்பலாகச் சாலையை மறித்து கலவரத்தை ஏற்படுத்தும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட 13 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக Hilir Perak மாவட்டக் காவல்துறை தலைவர் Bakri Zainal Abidin தெரிவித்தார். கைது செய்யப்பட்டிருக்கும் 13 வெளிநாட்டினர்களும் நேப்பாள் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


இரவு 9.35 மணியளவில் தெலுக் இந்தானில் உள்ள Batu Lapan சாலையில் நேப்பாள் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர் மீது வாகனம் மோதியதாகவும் விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிறுத்தாமல் சென்றதால் விபத்தில் பாதிக்கப்பட்ட நேப்பாள் தொழிலாளருடன் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கலவரத்தை ஏற்படுத்தியதாகவும் Hilir Perak மாவட்டக் காவல்துறை தலைவல் Bakri Zainal Abidin தெரிவித்தார். 


கலவரத்தைக் கட்டுப்படுத்த போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கலவரத்தில் ஈடுப்பட்டவர்களைத் தடுத்து கலவரத்தைக் கட்டுப்படுத்திய நிலையில் கலவரத்தைத் தொடங்கிய 13 நேப்பாளத் தொழிலாளர்களைக் கைது செய்து விசாரணைக் காவலில் தடுத்து வைத்திருப்பதாகவும் Hilir Perak மாவட்டக் காவல்துறை தலைவல் Bakri Zainal Abidin தெரிவித்தார். அதிகாலை 2 மணிக்குக் கலவரம் முடக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் இக்கலவரத்தில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட நேப்பாளத் தொழிலாளர்கள் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது. 

 Seramai 13 warga Nepal ditahan kerana cuba mencetuskan rusuhan selepas kejadian langgar lari melibatkan rakan senegara mereka di Teluk Intan. Sekitar 1,000 pekerja kilang turun ke jalan raya, menyebabkan gangguan lalu lintas. Polis berjaya mengawal keadaan pada jam 2 pagi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *