சீனா நாட்டைச் சேர்ந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கினேனா? SAIFUDDIN மறுப்பு!

- Sangeetha K Loganathan
- 14 Mar, 2025
மார்ச் 14,
சீனா நாட்டைச் சேர்ந்த வணிகர்களுக்குத் தன்னிச்சையாகக் குடியுரிமையைத் தாம் வழங்கியதாக வெளிவந்த செய்திகளை உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail மறுத்தார். முன்னதாக இது தொடர்பானப் பதாகைகள் வெளிவந்த நிலையில் இதனை முழுமையாகத் தாம் கண்டிப்பதாகவும் விருப்பத்திற்குக் குடியுரிமையை வழங்க முடியாது என்றும் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
வெளிநாட்டினர்களுக்கு வழங்கப்படும் மலேசிய குடியுரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்பதையும் தனி நபராகக் குடியுரிமைகளை வழங்க முடியாது என்றும் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். இது முற்றிலும் போலியானச் செய்தி என்றும் சம்மந்தப்பட்ட தரப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail
Menteri Dalam Negeri, Datuk Seri Saifuddin Nasution Ismail menafikan dakwaan fitnah mengenai isu kewarganegaraan yang tular di media sosial. Beliau menegaskan kelulusan kewarganegaraan mengikut Perlembagaan dan menggesa rakyat mendapatkan maklumat sahih bagi mengelak penyebaran berita palsu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *