RM500,000 மதிப்பிலானக் கடல் உயிரினங்களைக் கடத்திய மூவர் கைது!

top-news

மார்ச் 15,

அறிய வகையிலானக் கடல்வாழ் உயிரினங்களில் ஒன்றான kara வகை இரால்களைக் கடத்திய 3 உள்ளூர் ஆடவர்களைக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தினர் கைது செய்தனர். அதிகாலை 2.30 மணிக்கு ஜொகூரின் பத்து பஹாட் கடல்பகுதியில் சந்தேகத்திற்குரிய மீன்பிடி படகைச் சோதனயிடும் போது அரிய வகையிலானக் காரா வகை இரால்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஜொகூர் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Kama Azri Kamil தெரிவித்தார்.

சுமார் 83,000 க்கும் மேற்பட்ட காரா வகை இரால்கள் 17 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் மீன்பிடி படகில் இருந்த 30 முதல் 33 வயதுடைய உள்ளூர் ஆடவர்கள் முறையான அனுமதியில்லாமல் படகின் மூலமாக வெளிநாட்டுக்குக் காரா வகை இரால்களைக் கடத்த முயன்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஜொகூர் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Kama Azri Kamil தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட காரா வகை இரால்களின் மதிப்பு RM500,000 என கணக்கிடப்பட்டுள்ளது.

Maritim Malaysia Johor menggagalkan cubaan menyeludup 83,000 benih udang kara bernilai hampir RM500,000 di perairan Tanjung Piai. Tiga lelaki tempatan ditahan ketika menaiki bot yang membawa 17 kotak polistirena berisi benih udang dari negara jiran tanpa kebenaran.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *