மலேசியா தாய்லாந்து எல்லையில் துப்பாக்கிச் சூடு! இருவர் பலி! 8 பேர் படுகாயம்!

top-news

மார்ச் 9,

தாய்லாந்து மலேசிய எல்லை பகுதியான Sungai Golok கில் வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த ஒரு கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 8 பேர் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.15 மணிக்கு எல்லைப் பகுதியின் தாய்லாந்து குடிநுழைவுத் துறையின் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sungai Golok பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் 50 மீட்டர் தொலைவில் உள்ள கட்டிடத்தையும் வெடிகுண்டுகள் வைத்து தகர்த்ததாகவும் தெரிய வந்துள்ளது. முகமூடி அணிந்திருந்த கும்பலால் இத்தூப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும் 2 தாய்லாந்து நாடு ராணுவ வீரர்கள் உயிரிழந்தததுடன் படுகாயம் அடைந்த 8 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணி நிலவரப்படி கிடைக்கப்பெற்ற தகவலின்படி இந்த துப்பாக்கிச் சூட்டில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான விசாரணைகள் நடைபெற்று வருவதால் விசாரணைக்குப் பின்னர் தெரியப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Dua anggota tentera Thailand maut dan lapan lagi cedera dalam kejadian tembakan di Sungai Golok, sempadan Malaysia-Thailand. Sekumpulan individu bertopeng melepaskan tembakan ke arah pejabat imigresen Thailand sebelum meletupkan sebuah bangunan berhampiran. Pihak berkuasa sedang menyiasat insiden ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *