போலி முதலீட்டில் RM412,443 இழந்த இல்லதரசி!

- Sangeetha K Loganathan
- 15 Mar, 2025
மார்ச் 15,
அதிக லாபமீட்டும் ஆசையில் போலி முதலீட்டில் முதலீடு செய்த 58 வயது இல்லதரசி RM412,443 பணத்தை மொத்தமாக இழந்ததாக மூவார் மாவட்டக் காவல் ஆணையர் Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார். பாதிக்கப்பட்ட கடந்த ஜனவரி 23 முதல் மார்ச் 6 வரையில் சம்மந்தப்பட்ட முதலீடு நிறுவனத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வந்ததாகத் தெரிய வந்துள்ளது.
சமூக வலைத்தலத்தின் விளம்பரத்தின் மூலமாக ஈர்கப்பட்ட பெண் அடையாளம் தெரிய நபருடன் WhatsApp மூலமாகத் தொடர்புக் கொண்டு அந்த முதலீட்டில் தொடக்க பணமாக RM500 முதலீடு செய்ததாகவும் 24 மணிநேரத்தில் RM 67 லாபமாகப் பெற்றதும் 7 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 35 பரிவர்த்தனைகள் மூலமாக மொத்தம் RM412,443 முதலீடு செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதன்பின்னர் லாபமாகப் பெற்ற பணத்தைப் பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்ட போது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் கடந்த 2 மாதங்களாக எந்தவொரு லாபத்தையும் அவர் பெறவில்லை எனும் குறுஞ்செய்தி மட்டுமே கிடைத்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பாதிக்கப்பட்ட 58 வயது இல்லத்தரசி.
Seorang suri rumah berusia 58 tahun kehilangan RM412,443 akibat skim pelaburan palsu yang menjanjikan pulangan tinggi. Mangsa tertarik melalui iklan di media sosial dan berkomunikasi melalui WhatsApp sebelum menyedari penipuan itu. Polis sedang menyiasat kes tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *