வெளிநாட்டினர்களைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யும் நால்வர் கைது!

top-news

மார்ச் 14,

கோலாலம்பூர், சிலாங்கூர், புக்கிட் ராஜா பகுதிகளில் தேசிய குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் முறையான ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டினர்களை மலேசியாவுக்குள் கொண்டு வரும் தொழிலாளர் இறக்குமதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசியக் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டிருக்கும் நால்வரும் பங்களாதேஷைச் சேர்ந்த 22 முதல் 38 வயதுள்ளவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரையும் பணிக்கு அமர்த்திய சம்மந்தப்பட்ட தொழிலாளர் இறக்குமதி நிறுவனத்தின் உரிமையாளரான உள்ளூர் பெண் ஒருவரையும் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார். நடத்தப்பட்ட சோதனையில் வயிலாக RM69,380 ரொக்கமும் 134 பாஸ்போர்ட்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தேசியக் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.

Empat pekerja syarikat pengambilan buruh ditahan dalam operasi imigresen di Kuala Lumpur, Selangor dan Bukit Raja kerana membawa masuk warga asing tanpa dokumen sah. Seorang pemilik syarikat tempatan turut disiasat. Wang tunai RM69,380 dan 134 pasport dirampas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *