நோன்புப் பெருநாள் சிறப்பு உதவி நிதியை வழங்குவீர் அரசிடம் கியூபெக்ஸ் விண்ணப்பம்!

- Muthu Kumar
- 14 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 14-
நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்படும் சுமையைக் குறைப்பதற்காக, பொதுச் சேவை ஊழியர்களுக்கு இவ்வாண்டிலும் சிறப்பு உதவி நிதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யுமாறு, பொதுச் சேவை ஊழியர்கள் சங்க காங்கிரஸ் (கியூபெக்ஸ்) அரசாங்கத்திடம் விண்ணப்பித்திருக்கிறது.
பல ஆண்டுகளாக இத்தகைய உதவி நிதி வழங்கப்பட்டு வருவதால், இவ்வாண்டிலும் அரசாங்கம் அத்தகைய நோன்புப் பெருநாள் சிறப்பு நிதியை வழங்கும் என்று தமது தரப்பு எதிர்ப்பார்ப்பதாக, கியூபெக்ஸ் தலைவர் அட்னான் மாட் தெரிவித்தார். அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள அண்மைய சம்பள உயர்வை, பொதுச் சேவை ஊழியர்கள் தற்போது பெற்றிருப்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம்.
''எனினும், நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் போதெல்லாம், சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் கலாச்சாரம் பின்பற்றப்பட்டுள்ளதால், இவ்வாண்டிலும் அந்நிதியை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்" என்று அவர் கூறினார்.
"நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் ஒவ்வொரு சமயத்திலும் செலவுகளும் அதிகரித்து வருகின்றன. இதையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று அட்னான் கேட்டுக் கொண்டார்.
Kongres Kesatuan Pekerja Dalam Perkhidmatan Awam (CUEPACS) memohon kerajaan mempertimbangkan pemberian bantuan khas Aidilfitri tahun ini. Presidennya, Adnan Mat, menyatakan walaupun kenaikan gaji baru dilaksanakan, bantuan khas tetap penting bagi meringankan beban perbelanjaan perayaan penjawat awam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *