ZAMRI VINOTH-க்கு எதிராக 894 போலிஸ் புகார்! காவல்துறை நடவடிக்கை!

- Sangeetha K Loganathan
- 13 Mar, 2025
மார்ச் 13,
இந்து மதம் சார்ந்த பண்டிகைகளையும் தைப்பூசக் காவடியாட்டம் பேய்களின் ஆட்டம் என கருத்து தெரிவித்த இஸ்லாமிய சமய போதகரான ZAMRI VINOTH-க்கு எதிராக இதுவரை 894 போலிஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேசியக் காவல்துறை தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்தார். குற்றப்பத்திரிக்கைகளின் தொகுப்புகளை அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையிலானக் கருத்துகளைப் பகிரும் தனிநபர்கள் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கைகள் எடுப்பதாகவும் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திடமிருந்துக் குற்றப்பத்திரிக்கை குறித்து பதில்கள் கிடைத்ததும் விசாரணையைத் தொடர்வதாகவும் Tan Sri Razarudin Husain தெரிவித்தார்.
Polis menunggu arahan Pejabat Peguam Negara mengenai siasatan terhadap Zamri Vinoth yang didakwa menghina agama Hindu. Sebanyak 894 laporan polis telah diterima dan kertas siasatan telah diserahkan kepada AGC untuk tindakan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *