உலகக் கோப்பை ஹாக்கியின் ஆட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொள்ள மலேசியா தயார்!

- Muthu Kumar
- 04 Feb, 2025
கோலாலம்பூர், பிப். 4-
குரோஷியாவில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பையின் முதல் குரூப் பி ஆட்டத்தில் மலேசியா மூன்று முறை உலக சாம்பியனான ஜெர்மனியை எதிர்கொள்கிறது.பெல்ஜியம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு நட்பு போட்டிகள், போரெக்கின் ஜாடிகா விளையாட்டு மையத்தில் தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்த ஜெர்மனிக்கு எதிராக கடினமான ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம், என்றார்.ஜெர்மனிக்கு எதிராக விளையாடிய பிறகு, மலேசியா செவ்வாய்க்கிழமை தென்அமெரிக்க சாம்பியனான அர்ஜெண்டினாவையும், பிப்ரவரி 6 ஆம் தேதி ஆசிய சாம்பியனான ஈரானையும் சந்திக்கிறது.
நட்புரீதியான ஆட்டத்தில் தேசிய அணி 4-5 என்ற கணக்கில் பெல்ஜியத்திடம் தோற்று ஆஸ்திரேலியாவிடம் 5-5 என சமநிலை பெற்றது.வீரர்களின் உடற்தகுதி உகந்த அளவில் உள்ளது மற்றும் அணியின் விளையாட்டாளர்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை என்று முகமட் ரோட்ஜானிசம் கூறினார்.
ஏ குழுவில் நடப்பு சாம்பியன்கள் மற்றும் ஐரோப்பிய சாம்பியன்களான ஆஸ்திரியா, போலந்து, தென்னாப்பிரிக்கா, குரோஷியா உள்ளன. குரூப் சி ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நமீபியா, டிரினிடாட், டொபாகோவுடன் உள்ளன.கடந்த ஆண்டு மே மாதம் கஸகஸ்தானில் நடந்த 2024 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்த மலேசியா உலகக் கோப்பையில் முதல்முறையாக விளையாடி சாதனை படைத்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *