மலேசியாவின் தடகள வீரர் யாராவது ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை வெல்வார்கள் - லீ சோங் வெய் நம்பிக்கை!
- Muthu Kumar
- 23 Jul, 2024
முன்னாள் ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் உலக நம்பர் 1 வீரரான லீ சோங் வெய் நாட்டின் வெற்றிகரமான ஒலிம்பிக் வீரராகத் தொடர்ந்து, மூன்று வெள்ளிப் பதக்கங்களை வென்ற மலேசிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இவர் முதன் முதலில் பெய்ஜிங்கில் 2008 இல் வெள்ளி வென்றார், அதைத் தொடர்ந்து லண்டன் 2012 மற்றும் ரியோ டி ஜெனிரோ 2016 இல் ஒலிம்பிக்கில் வென்றார்.2019 ஆண்டில் ஓய்வு பெற்ற சோங் வெய் பாரிஸ் ஒலிம்பிக்கில் போட்டியிடும் மலேசிய விளையாட்டு வீரர்கள் நமது மலேசிய நாட்டிற்காக ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை வெல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தன்னைவிட சிறப்பாக செயல்படுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மலேசிய மக்களின் நீண்ட கால கனவான ஒரு மலேசிய விளையாட்டு வீரர் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று வந்தால் தனது வாழ்க்கையில் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை தான் சாதித்ததாக மகிழ்ச்சி அடைவேன் என்று கூறினார்.
மலேசியாவின் தடகள வீரர் யாராவது ஒருவர் முதல் தங்கப் பதக்கத்தை வெல்வார்கள் எனவும் 33 மில்லியன் மலேசியர்கள் போலவே தானும் விளையாட்டு வீரர்களுக்காக வேண்டிக் கொள்வேன் சோங் வெய் கூறியுள்ளார்.
ஒருவேளை லீ சீ ஜியா (பேட்மிண்டன்), ஆரோன் சியா-சோ வூய் யிக் (பேட்மிண்டன்), அஜிசுல்ஹாஸ்னி அவாங் (டிராக் சைக்கிள் ஓட்டுதல்), பேர்லி டான்-எம் தினா (பேட்மிண்டன்)... இவர்களில் யாராவது ஒருவர் கண்டிப்பாக இந்த முறை தங்கம் வெல்வார்கள் என தான் நம்புவதாகவும் பெருமையுடன் கூறினார். அதே நேரத்தில் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட தங்கப் பதக்கங்களையும் கொண்டுவர வாய்ப்புள்ளதாகவும் சோய் வெங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் அது என்னவென்றால் மலேசியராக நாம் ஒவ்வொருவரும் இந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களை ஆதரிக்க வேண்டும் என்று சோங் வெய் தமது கருத்தினை தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *