ஞாயிறு : 13 ஏப்ரல், 2025
12 : 38 : 37 AM
முக்கிய செய்தி

PUTRA HEIGHTS வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கல்வி உதவி நிதி!

top-news

ஏப்ரல் 2,

நேற்று Putra Heights எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் கல்விக்குத் தலா RM 1,000 ரிங்கிட் கல்வி நிதியுதவி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார். இந்த வெடிப்பில் 23 பள்ளிகளைச் சேர்ந்த 102 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களின் கல்வி இதனால் பாதிக்க கூடாது எனும் நோக்கத்தில் இந்த கல்வி நிதி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 102 பள்ளி மாணவர்களில் 4 மாணவர்கள் கடுமையானக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கல்வி அமைச்சு அவர்களின் சிகிச்சைக்கானச் செலவுகளை ஏற்பதாகவும் Fadhlina Sidek உறுதியளித்தார். தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் Putra Heights எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களுக்குக் கல்வி அமைச்சின் சிறப்புக் குழு அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக நிவாரண மையத்தில் கல்வி அமைச்சின் சிறப்புப் பணிக்குழு முகாமிட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.

Menteri Pendidikan, Fadhlina Sidek, mengumumkan bantuan pendidikan RM1,000 bagi setiap pelajar yang terjejas akibat letupan paip gas di Putra Heights. Seramai 102 pelajar dari 23 sekolah terkesan termasuk empat yang sedang menerima rawatan di hospital. Kementerian Pendidikan juga akan menanggung kos rawatan mereka dan telah menubuhkan pasukan khas di pusat bantuan untuk membantu pelajar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *