மனோஜ் சவப்பெட்டி மீது நடந்த மோசமான செயலால் திரைபிரபலங்கள் கண்டனம்!

- Muthu Kumar
- 30 Mar, 2025
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக் கொண்டு வந்தது.அவரது மரணத்திற்கு காரணம் மன அழுத்தம் என கூறப்பட்டு வந்த நிலையில்,இது தவறான தகவல் என இயக்குநர் பேரரசு தெரிவித்திருக்கிறார்.
மனோஜ் மன அழுத்தத்தில் இருந்ததால் உயிரிழந்தார் என கூறுவது தவறான தகவல்,அவர் எப்போதும் சந்தோஷமாகத்தான் இருந்தார்.அவரது உடல்நிலை காரணமாகத்தான் இது நடந்தது. தேவையில்லாமல் இதை மன அழுத்தத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது என கூறியுள்ளார்.
அதே சமயம்,மனோஜின் மறைவிற்குப் பின்னர் நிகழ்ந்த சில செயல்கள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் சூர்யா பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூற வந்தபோது,சிலர் வீடியோ எடுக்க வேண்டும் என்பதற்காக மனோஜின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் ஏறி வீடியோ எடுத்துள்ளனர்.இது குறித்து திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“ஒரு குடும்பம் துயரத்தில் இருக்கும் நேரத்தில் கூட சிலர் சமூக வலைத்தள புகழுக்காக இப்படி செய்ய வேண்டும் என எண்ணுவதா?” என்று பிரபலங்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.”மனோஜ் மன அழுத்தத்தில் இருந்ததால் உயிரிழந்தார் என கூறுவது தவறான தகவல்.அவர் எப்போதும் சந்தோஷமாகத்தான் இருந்தார்.அவரது உடல்நிலை காரணமாகத்தான் இது நடந்தது,தேவையில்லாமல் இதை மன அழுத்தத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது” என கூறியுள்ளார்.
“ஒரு குடும்பம் துயரத்தில் இருக்கும் நேரத்தில் கூட சிலர் சமூக வலைத்தள புகழுக்காக இப்படி செய்ய வேண்டும் என எண்ணுவதா?” என்று பிரபலங்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சமீபத்தில் கூட பிரிதிவிராஜ் தனது தந்தை மறைவின் போது மம்மூட்டி அஞ்சலி செலுத்த வந்த போது அங்கிருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தது எனக்கு மிகவும் மனவருத்தத்தை கொடுத்தது என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பார். இந்த மோசமான நிலைமை எப்போது மாறும் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *