சிறந்த மனிதர்களை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்- ஓம்ஸ் பா.தியாகராஜன்!

- Muthu Kumar
- 16 May, 2025
கோலாலம்பூர், மே 16-
ஆசிரியர்கள் இந்நாட்டின் கண்களாகவும் மாணவர்களின் உயிர் மூச்சாகவும் இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் எனும் முதுமொழிக்கேற்ப ஆசிரியர்கள் என்றும் வணக்கத்திற்குரியவர்கள் குணமுடையவர்கள் என்று ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா. தியாகராஜன் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஒரு மாணவரின் கல்வி தேர்ச்சிக்கும் வெற்றிக்கும் ஆசிரியர்களின் பங்களிப்புக்கு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் உணர்வர். அத்தகைய குணமுடைய ஆசிரியர்களின் தியாகங்களை நாம் எளிதில் மறந்துவிட முடியாது.
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதல்ல. ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னத பணியாகும்.
அப்படிப்பட்ட தெய்வீகப் பணியை மாணவர்களுக்கு அளிக்க தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக உள்ளவர்கள்தான் ஆசிரியர்களாவர். எனவே இந்நாட்டிலுள்ள ஆசிரியர்கள் குறிப்பாக தமிழ்ப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிறந்த சேவையை வழங்கி வருகிறார்கள். அவர்களின் அந்த சிறந்த பணிகள் மேலோங்க அனைவரும் வாழ்த்துவோம்.இவ்வாறு ஆசிரியர் தின செய்தியில் ஓம்ஸ் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.
Pengerusi OMS, P. Thiagarajan menyatakan guru ibarat mata negara dan jiwa pelajar. Guru bukan sekadar mengajar, tetapi membentuk insan. Beliau menghargai jasa guru, terutama di sekolah Tamil, sempena ucapan Hari Guru.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *