பினாங்கு மாநகராட்சியின் கடல் திராட்சை நகர்ப்புற விவசாய ஊக்குவிப்பு!

- Muthu Kumar
- 10 Mar, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, மார்ச் 10-
பினாங்கு மாநகராட்சியின் பசுமைக் கலாச்சார திட்டத்தின் ஓர் ஊக்குவிப்பு அங்கமாக, இங்கு லெபோராயா ரோஸ் சாலையில் சமூகக் கூட்டுறவுத் தோட்டமாக செயல்பட்டு வரும், நகர்ப்புற விவசாய அமைப்புடன். கடல் திராட்சை பயிரிடும் வழிமுறைகள் தொடர்பில், அண்மையில் ஒரு கலந்தாய்வு விவாதம் நடத்தப்பட்டது.
மாநில மாநகராட்சித் தலைவர் டத்தோ அ.ராஜேந்திரன் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இயக்குநர் முகமட் பஸீர் சுலைமான் ஆகிய இருவரும் இந்த விவகாரம். குறித்து சம்பந்தப்பட்ட விவசாய உற்பத்தி அதிகாரிகளுடன் இந்த விவாதம் தொடர்பில் பங்கேற்று, வேண்டிய விளக்கங்களைப் பெற்றனர்.
கடலியல் மற்றும் கடல் சார்ந்த ஆய்வு மையத்தின் துணையுடன், இந்த விவசாய உற்பத்திக் கூடம் செயல்பட்டு வரும் நிலையில், கடல் திராட்சை விவசாய நுணுக்கங்களை கற்றுணர்ந்து, அதன் உற்பத்தியை மேம்படுத்தும் தலையாய நோக்கத்துடன் இத்திட்டம் தொடர்பில், மேலும் பல உத்திகளையும் தகுந்த ஆலோசனைகளையும் பெறுவதற்குரிய அம்சங்களில், இதன் அதிகாரிகள் ஈடுபாடு காட்டி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
Caulerpa lentillifera என்றழைக்கப்படும் இந்த பயிரீட்டுத் திட்டம், கடல் திராட்சை என்பதாக அர்த்தம் கூறப்பட்டாலும் இது.பச்சைப்பசிய கடல்பாசி என்பதே உண்மையாக விளங்குகின்ற நிலையில், இது கனிம வகையைச் சார்ந்த, அதிக வைட்டமீன்கள் நிறைந்த சிறப்பினைக் கொண்டிருக்கிறது.
ஓர் உன்னத உணவாக இதன் அம்சங்கள் கூடுதல் பயன்களை உள்ளடக்கியிருப்பதால், இதன் உற்பத்திக்கு துணை நிற்பதில் மாநகர் மன்றம் தனி ஆர்வம் காட்டி வருவதாகவும், இந்த கடல் திராட்சையின் சிறப்பம்சம் சந்தைகளில் வெளிப்பட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பது திண்ணமென்றும், இதன் உற்பத்திக் கூடத்தை பார்வையிட்ட ராஜேந்திரன் பெருமிதம் கொண்டார்.
Majlis Bandaraya Pulau Pinang menggalakkan pertanian bandar dengan projek penanaman anggur laut (Caulerpa lentillifera) di Lebuhraya Rose. Inisiatif ini bertujuan meningkatkan hasil dan nilai pemakanan tanaman tersebut. Datuk A. Rajendran optimis projek ini akan menarik perhatian pasaran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *