புதிய சில தற்காலிக நிவாரண மையங்களைத் திறக்க சமூகநலத் துறைக்கு உத்தரவு!

- Muthu Kumar
- 03 Apr, 2025
கூச்சிங், ஏப். 3-
சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்கு புதிய சில தற்காலிக நிவாரண மையங்களைத் திறக்க சமூகநலத் துறை, ஜேகேஎம்மிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது புத்ரா ஹைட்ஸ் பள்ளி பள்ளிவாசல் பயன்படுத்தப்படுவதால் மக்களை அங்கு தங்க வைக்க முடியாது என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.
நேற்று காலை 11 மணி நிலவரப்படி இப்பேரிடரில் பாதிக்கப்பட்ட 484 பேர் ஜேகேஎம்-இல் பதிவு செய்துள்ளனர்.மேலும், சிலர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அனைவரும் பிபிஎஸ்ஸில் தங்கவைக்கப்படவில்லை.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் பொருள் உதவி வழங்க விரும்புபவர்கள் அவற்றை வைப்பதற்கான இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் அந்த முயற்சியை ஒத்திவைக்குமாறு பொது மக்களையும் நிறுவனங்களையும் டத்தோஸ்ரீ நேன்சி கேட்டுக் கொண்டார்.
Kerajaan mengarahkan JKM membuka pusat pemindahan baharu bagi mangsa kebakaran Putra Heights kerana masjid sekolah tidak dapat digunakan. Sehingga kini, 484 mangsa berdaftar, sementara ada yang masih dirawat. Bantuan makanan dan barangan ditangguhkan akibat kekurangan ruang penyimpanan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *