நேபாளில் 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் பெருமாள் சிலை!

- Muthu Kumar
- 17 Feb, 2025
பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். அனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலையை பற்றி தெரிந்து கொள்ளலாம்..
இந்தியாவில் அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களையும் அதன் வரலாறுகளையும் பார்க்கும்போது நமக்கு பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அந்த காலத்தில் கட்டிட கலையில் நம் முன்னோர்கள் எப்படி சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த கோயில்கள் இருந்து வருகின்றன. இந்த வகையில் நீரில் மிதக்கும் அதிசய விஷ்ணு சிலையை கொண்ட கோயில் ஒன்று நேபாளத்தில் உள்ளது.
நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், கிட்டதட்ட 14 அடி உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை எப்படி இவ்வளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.
கி.பி 07 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும் இதற்கான அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன. இந்த சிலையின் சிறப்பம்சம் என்னவென்றால் நீரில் இருந்து 14 அடி உயரத்தில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட விஷ்ணு சிலை மிதப்பது தான் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்து வருகிறது.
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் சிவபெருமானுக்கான திருவிழாவின்போது இச்சிலையின் அருகிலேயே இந்தச் சிலையை போலவே கண்ணாடி பிம்பமாக சிவபெருமானின் உருவம் தண்ணீரிலே தெரியுமாம். இச்சிலை வானை பார்த்தவாறு இருப்பினும் இந்த அதிசயம் நிகழும் என்று அங்கிருக்கும் மக்கள் கூறுகிறார்கள்.கோயிலின் இந்த சிறப்பு அம்சங்களை பார்ப்பதற்காகவே பக்தர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *