மலேசியா - கஜகஸ்தான் உறவு வலுப்படும்! - பிரதமர்
- Shan Siva
- 17 May, 2024
மலேசியாவும்
கஜகஸ்தானும் மார்ச் 16, 1992 இல் நிறுவப்பட்ட தங்கள் உறவுகளைத்
தொடர்ந்து வலுப்படுத்தவும், ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை ஆராயவும்
ஒப்புக்கொண்டுள்ளன.
பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவுடன்
நேற்று அதிபர் மாளிகையில் (அக் ஓர்டா) நடந்த சந்திப்பின் போது உடன்பாடு
எட்டப்பட்டதாகத் தெரிவித்தார்.
வர்த்தகம், முதலீடு, உயர்கல்வி, சுற்றுலா மற்றும் ஹலால்
தொழில் போன்ற துறைகளை உள்ளடக்கிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து
விரிவாக விவாதிக்கப்பட்டதாக நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.
கஜகஸ்தான் அதிபர்
காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் அதிபர் மாளிகையில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு
நிகழ்ச்சியில் மலேசியக் குழுவினருடன் கலந்துகொண்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
டோகாயேவ் அரண்மனையைப்
பார்வையிட்ட பிறகு, மலேசிய
தூதுக்குழுவினருக்கும், தமக்கும் இரவு விருந்து
வழங்கப்பட்டது என்று அன்வார் குறிப்பிட்டார்.
பிரதமரின்
குழுவில் வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டெங்கு
டத்தோஸ்ரீ ஜஃப்ருல் டெங்கு அப்துல் அஜீஸ், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் மற்றும் பிரதமர்
துறை அமைச்சர் (மத விவகாரங்கள்) Datuk
Dr Mohd Na'im Mokhtar ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஏறக்குறைய 20
மில்லியன் மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானுக்கு மலேசியப்
பிரதமர் கடைசியாக 2014 இல் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Nursultan
Nazarbayev சர்வதேச விமான
நிலையத்திற்கு வந்தவுடன், அன்வாரும் அவரது தூதுக்குழுவும் உலகின்
மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான அஸ்தானா கிராண்ட் மசூதிக்கு விஜயம் செய்தனர், இது நகரத்தின் குறிப்பிடத்தக்க மத மையமாகச் செயல்படுகிறது.
உலகின் ஒன்பதாவது
பெரிய நாடான கஜகஸ்தானில் சுமார் 20 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர், முஸ்லீம் மக்கள் தொகை 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
2023 இல்
கஜகஸ்தானுடனான மலேசியாவின் மொத்த வர்த்தகம் RM474.5mil (US$104.2mil)
ஆக இருந்தது, RM465.6mil (US$102.2mil) கஜகஸ்தானுக்கு
மலேசிய பொருட்களை ஏற்றுமதி செய்வதாகவும், RM8.9mil (US$1.9mil) கஜகஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட
மதிப்பாகவும் இருந்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *