NSE சாலையில் விபத்து!ஒருவர் பலி! போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி!

top-news
FREE WEBSITE AD


சுங்காய் மற்றும் ஸ்லிம் ரிவருக்கு இடையில் வடக்கு தெற்கு விரைவுச்சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் பாதை  KM367 இல் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில்  லாரி ஓட்டுநர் பலியானார்.

முட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியின் ஓட்டுநர்  தனது வாகனத்தில் சிக்கிக் கொண்டதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மைய அதிகாரி நஷுஹா ஃபஹ்த் அஹ்மத் மிஜார் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 4.40 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாகக் குறிப்பிட்ட அவர்,

தாங்கள் வந்தபோது, ​​ முட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மற்றும் பழங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு லாரிகள் விபத்தில் சிக்கியதைக் கண்டதாக  அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

முட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியின் ஓட்டுநர் மீட்கப்பட்ட நிலையில்,  மருத்துவப் பணியாளர்களால் அவர் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இதில் மற்றொரு ஓட்டுநர் காயமடைந்தார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விபத்து காரணமாக 13 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக மூவாலிம் மாவட்ட காவல்துறைத் தலைவர்,  உதவி ஆணையர் முகமட் ஹஸ்னி முகமட் நசீர் தெரிவித்தார்.


இதனால், அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

நெரிசலில் சிக்காமல் இருக்க மாற்று வழிகளாக தாப்பா, பீடோர் மற்றும் சுங்காய் சுங்கச்சாவடி எக்ஸ்பிரஸ்வேயில் இருந்து வெளியேறுமாறு பொதுமக் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதே நேரத்தில் வழக்கமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *