இனி கார்களில் ‘டேஷ் கேம்‌’ கட்டாயமா? போக்குவரத்து அமைச்சர் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD


 வாகனங்களில்‌ டேஷ் கேம்‌’  எனப்படும்‌ கேமராக்கள்‌ இடம்‌பெறுவதைக்‌ கட்டாயமாக்கும்‌ திட்டம்‌ எதுவும்‌ அரசாங்கத்திற்குக்‌ கிடையாது என்று போக்குவரத்து அமைச்சர்‌ அந்தோணி லோக் நேற்று தெரிவித்தார்‌.

இப்பரிந்துரையை அமல்படுத்துவது சாத்தியமே. ஆனால்‌, கூடுதல்‌ செலவு பிடிக்கும்‌ என்பதற்காக அதனைப்‌ பொதுமக்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளமாட்டார்கள்‌ என்று அவர்‌ குறிப்பிட்டார்‌.

ஏதாவது ஒன்றைக்‌ கட்டாயமாக்கினால்‌, கூடுதல்‌ செலவு ஏற்படுகிறது என்று மக்கள்‌ புகார்‌ கூறுவார்கள்‌. அவர்கள்‌ ஏற்கெனவே விலைவாசியினால்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌ என்பதால்‌, கூடுதல்‌ செலவு ஏற்படுவதை அவர்கள்‌ விரும்ப மாட்டார்கள்‌ என்று லோக்‌ கூறினார்‌.

ஆகவே, வாகனங்களில்‌ டேஷ்கேம்‌ படப்பதிவுச்‌ சாதனங்களைக்‌ கட்டாயமாக்குவது குறித்து நாங்கள்‌ இன்னும்‌ முடிவு செய்யவில்லை என்று சாலைப்‌ பாதுகாப்பு குறித்து செய்தியாளர்களுடன்‌ நடைபெற்ற ஒரு சந்திப்பின்போது அவர்‌ தெரிவித்தார்‌.

ஆயினும்‌, புதிய கார்களில்‌ டேஷ்கேம்‌ கேமராக்கள்‌ பொருத்தப்படுவது குறித்து அரசாங்கம்‌ ஆராயும்‌ சாத்தியம்‌ இருக்கிறது. ஆரம்பத்தில்‌ புதிய கார்களுக்கான நிபந்தனையாக இதனை விதிக்கலாம்‌. கார்‌ தயாரிப்பாளர்கள்‌ சில கட்டுப்பாடுகளைக்‌. கடைப்பிடித்தாக வேண்டும்‌. அதன்பிறகே, கார்களில்‌ டேஷ்கேம்‌ கேமராக்கள்‌ ஒரு நிரந்தரமான அம்சமாக இடம்பெறமுடியும்‌. இப்போதைக்கு இப்புதிய விதிமுறையைக்‌ கட்டாயமாக்குவது பெரும்‌ சவாலாக இருக்கும்‌ என்றார்‌ லோக்‌.

கார்களில்‌ குழந்தைகளுக்கான இருக்கைகள்‌ இருக்க வேண்டும்‌ எனும்‌ விதியை அவர்‌ இதற்கு உதாரணம்‌ காட்டினார்‌. கார்களில்‌ அத்தகைய இருக்கைகளைப்‌ பொருத்துவது எளிதான செயல்போல்‌ தோன்றினாலும்‌, அதனைச்‌ செயல்படுத்துவது மிகச்‌ சிரமமான ஒன்றாகஇருக்கிறது என்று  அவர்‌ விளக்கினார்‌.

ஐந்து இருக்கைகள்‌ கொண்ட வாகனங்களில்‌ தங்களின்‌ குழந்தைகளுக்குப்‌ போதுமான இருக்கைகளைப்‌ பொருத்தும்‌ வசதிகள்‌ இல்லை என்று சில வாகன உரிமையாளர்கள்‌ புகார்‌ தெரிவித்திருந்தனர்‌ என்றார்‌!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

[email protected]