எனக்கு நிதி இல்லை! நீதி வேண்டும்! – Syed Saddiq சீற்றம்!
- Thina S
- 07 May, 2024
கடந்த 2 ஆண்டுகளாகத் தனது மூவார் நாடாளுமன்றத்திற்கு ஒற்றுமை அரசு நிதி வழங்காமல் மறுப்பதாக MUAR நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq குற்றம் சாட்டியுள்ளார். ஒவ்வொரு முறையும் தாம் முறையாக விண்ணப்பம் செய்தும் ஒற்றுமை அரசு நிதி வழங்க மறுப்பதாகவும் தான் ஒற்றுமை அரசுக்கு எதிரான கருத்துகளை வெளியிடுவதால் தனது நாடாளுமன்றத்திற்கான நிதியை வழங்காமல் பழி வாங்குவதாகவும் இன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் MUAR நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq.
MUAR நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq உடன் MUAR நாடாளுமன்றத்தின் வாக்காளர்களான Najib Abu Nawar, Mohd Bakirudin Abdullah, Muhamad Fadzly Bisri ஆகிய மூவரின் கோரிக்கையையும் உயர்நீதிமன்றம் ஏற்று வழக்கை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
சுமார் 4 மில்லியன் ரிங்கிட்டுக்கான நிதி கோரிக்கையைத் தாம் முன் வைத்ததாகவும், தற்போது ஒற்றுமை அரசு தனது நிதி கோரிக்கையைத் நிராகரித்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட கருத்து முரண்களால் ஒற்றுமை அரசுக்கு வழங்கிய தமது ஆதரவைத் திரும்பப் பெற்றதால் ஒற்றுமை அரசின் பழி வாங்கும் செயல் என அவர் தெரிவித்தார்.
Syed Saddiq இன் வழக்கை ஏற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி Datuk Wan Ahmad
Farid Wan Salleh தலைமையில் எதிர்வரும் 12 ஜூலை விசாரணைக்குக்
கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *