500 டன் ஏவுகணை குலசேகரபட்டினத்தில் இருந்து விண்ணுக்கு பாயும் - இஸ்ரோ!

- Muthu Kumar
- 18 Mar, 2025
சென்னை ஐஐடியில் விண்வெளி மற்றும் உந்து விசை ஆராய்ச்சிக்கு பயனுள்ள வகையில் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் பெயரில் அமைக்கப்பட்ட திரவ மற்றும் வெப்ப அறிவியல் ஆய்வகத்தை இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று திறந்து வைத்தார்.
இதில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்து கொண்டார். தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த நாராயணன் கூறியதாவது: விண்வெளி துறைக்கு வெப்ப அறிவியலும், உந்து விசையும் மிக முக்கியமான ஒன்று. மனிதர்களை வின்ணிற்கு அனுப்பும் ராக்கெட் செயல்பாட்டிற்கு இந்த ஆய்வகம் பெரும் உபயோகமாக இருக்கும்.
சைக்கிளில் தள்ளிக்கொண்டு ராக்கெட்டை செலுத்தியதில் தொடங்கி உலகமே ராக்கெட் ஏவுதலில் இந்தியாவை தலைமை நாடாக பார்க்கும் அளவிற்கு இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது.
ககன்யான் திட்டத்தின் பயிற்சி திட்டம் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்படும். வயோமித்ரா எனும் ரோபோவை ககன்யான் திட்டத்தில் இந்த வருடத்தில் அனுப்ப உள்ளோம். 2040ல் இஸ்ரோ தயாரித்த ஏவுகணை மூலம் இந்தியர்களை நிலாவுக்கு அனுப்புவதாக நமது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2 வருடத்திற்குள் குலசேகரபட்டினத்தில் இருந்து ஏவுகணை விண்ணுக்கு ஏவப்படும். குலசேகரபட்டினத்தில் இருந்து முதல்முறையாக 500 டன் எடை கொண்ட அடுத்த தலைமுறைக்கான ஏவுகணை விண்ணிற்கு பாய உள்ளது. இவ்வாறு இஸ்ரோ தலைவர் நாராயணன் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *