ஆன் லைன் மோசடியில் 6 லட்சம் இழந்த மாது!
- Shan Siva
- 14 May, 2024
56 வயதான ஓய்வு
பெற்ற மாது ஒருவர் இல்லாத ஆன்லைன்
முதலீட்டுத் திட்டத்தால் பாதிக்கப்பட்டு RM619,390 இழந்தார்.
பிப்ரவரியில் வெளிநாட்டு ஆடிட்டரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்த பிறகு, முதலீட்டில் சேர வாய்ப்பளித்ததாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய முன்வந்தார், இது முதலீடு செய்யப்பட்ட பணத்தின் அடிப்படையில் ஒவ்வொரு
மாதமும் 35 முதல் 50% வருமானம் தருவதாக உறுதியளித்தது.
பாதிக்கப்பட்ட பெண் பிப்ரவரி 19 முதல் மே 7 வரை 7 வெவ்வேறு
வங்கிக் கணக்குகளில் 28 பணப்
பரிவர்த்தனைகளைச் செய்ததோடு, பின்னர் சந்தேகமுற்ற அவர் புகாரைப் பதிவு
செய்ததாகவும், குற்றவியல்
சட்டத்தின் 420 வது பிரிவின்
கீழ் வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் எம்.குமார் தெரிவித்தார்.
ஜனவரி தொடக்கத்தில் இருந்து நேற்று வரை இதேபோன்ற 255 முதலீட்டு வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் , மொத்த இழப்பு RM21.24 மில்லியன் என்றும்
குமார் கூறினார்.
எனவே, பண பரிவர்த்தனைகளில்
ஈடுபடும்போது விழிப்புடன் இருக்குமாறும்,
முதலீட்டு
மோசடி போன்ற வணிகக் குற்றங்கள் குறித்த தகவல்களுக்கு வணிகக் குற்றப் புலனாய்வுத்
துறையின் முகநூல் மற்றும் டிக்டாக் கணக்கைப் பின்தொடருமாறும் அவர் பொதுமக்களுக்கு
அறிவுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *