பேராக்கில் வெள்ளம்! 69 வீடுகள் பாதிப்பு!

- Sangeetha K Loganathan
- 04 Apr, 2025
ஏப்ரல் 4,
தொடர் கனமழையின் காரணமாகப் பேராக்கில் பல்வேறு குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் பெய்த கனமழையின் காரணமாக Lumut, Manjung, Batu Gajah, Kinta ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் சம்மந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 69 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று காலை தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA தொடர்மழையினால் வெள்ள அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டதாகவும் நீர் நிலைகளின் அளவு அதிகரிக்கும் முன்னமே கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்ததால் வெள்ள நீர் வீடுகளைச் சேதப்படுத்தும் அளவிற்கு அதிகரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Perak dilanda banjir akibat hujan lebat berterusan sejak semalam menjejaskan 69 buah rumah di daerah Lumut, Manjung, Batu Gajah dan Kinta. MET Malaysia telah mengeluarkan amaran awal dan langkah pencegahan berjaya mengurangkan kerosakan teruk.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *