பேரா சுங்கை தமிழ்ப்பள்ளி கராத்தே தர நிர்ணய தேர்வு-30 மாணவர்கள் பங்கேற்பு!

- Muthu Kumar
- 28 Nov, 2024
(தி.ஆர்.மேத்தியூஸ்)
சித்தியவான், நவ. 28-
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே கராத்தே கலையை ஊக்கப்படுத்தும் வகையில்,பேரா மாநிலத்தின் சுங்கை வாங்கி தோட்ட 2 தமிழ்ப்பள்ளியில் இயங்கி வரும் கராத்தே வகுப்பு மாணவர்களுக்கான தர நிர்ணய பயிற்சி மிகவும் சிறப்பாக நடத்தியது.
இப்பள்ளியின் ஆசிரியை லெனிசர் தமிழரசி கடந்த பல ஆண்டுகளாக பொறுப்பாளராக இருந்து வரும் இந்த கராத்தே வகுப்பில் பயின்று வரும் 30 மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வுக்கு முன்னதாக கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைவர் டாக்டர் மாஸ்டர் எஸ்.ஸ்டாலின், பங்கேற்ற மாணவர்களுக்கு மூன்று மணி நேர கராத்தே பயிற்சியையும் நடத்தினார்.
இந்த தர நிர்ணய தேர்வு பயிற்சியில் பங்கேற்ற பல மாணவர்கள் தங்களின் திறமையான வெளிப்பாட்டின் மூலம் இரட்டை அடைவு நிலையைப் பெற்றனர்.நாடறிந்த கராத்தே மாஸ்டரும்,தேசிய கராத்தே அணியின் புதிய நிர்வாகியுமான மகாகுரு கே.ஆனந்தன் அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
மேலும் தொடர்ந்து இப்பள்ளியில் கராத்தே வகுப்பு சிறப்பாக நடைபெற்று வருவதற்கு,பள்ளியின் தலைமையாசிரியர் பரமேஸ்வரி சந்திரன்,பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரதிமலர் முனியாண்டி,பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் கதிரவன் சுப்பையா,பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் தொடர்ந்து வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும்,ஆதரவுக்கும் கராத்தே வகுப்பின் பயிற்றுநருமான ஆசிரியை மாஸ்டர் லெனிசர் தமிழரசி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நாட்டில் கராத்தே விளையாட்டில் நம் சமுதாயம் முன்னேறி அனைத்துலக நிலையிலும் பல்வேறு சாதனைகளைப் படைக்க,சுற்று வட்டார பெற்றோர்கள், அரசுசாரா இயக்கங்கள்,சமுதாயத் தலைவர்களும் இப்பள்ளியில் நடைபெற்று வரும் கராத்தே வகுப்பிற்கு ஆதரவு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்புக்கு
(016-5441895 - Master S. Lenicer)
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *