மலேசிய ஓபன் பட்டத்தை ரசிகர்களுக்காக வெல்வோம்-சென் டாங் ஜீ-தோ ஈ வெய்!

- Muthu Kumar
- 30 Nov, 2024
ஜனவரி 12-ம் தேதி நடைபெறவிருக்கும் மலேசிய ஓபன் பட்டத்தை தங்கள் ரசிகர்களுக்காக வெல்வோம் என்று நம்புவதாக மலேசிய கலப்பு இரட்டையர்களான சென் டாங் ஜீ-தோ ஈ வெய் தெரிவித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு போட்டியில் அறிமுகமான இவர்கள் தரப்படுத்தப்படாத ஜோடியாக இருந்தி தங்களை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் இந்த ஆண்டு அவர்கள் சற்று தடுமாறினார்
இருப்பினும் பாரிஸ் ஒலிம்பிக்கில் கால் இறுதிக்கு சென்று, இந்த ஆண்டு கொரிய ஓபனை வென்றதன் மூலம் டாங் ஜீ-ஈ வெய் தங்களது தர நிலையை உயர்த்தி உள்ளனர்.
"மலேஷியா ஓபன் மிகவும் முக்கியமான போட்டியாகும், இது நம் சொந்த நாட்டில் விளையாடப்படுவதால் ரசிகர்கள் எங்களை உற்சாகப்படுத்துவார்கள். நாங்கள் அவர்களுக்காக பட்டத்தை வென்று தர முயற்சிக்க விரும்புகிறோம்," என்று வெள்ளிக்கிழமை ஈ வெய் கூறினார்.இதற்கிடையில், மலேசிய ஓபன் பட்டத்திற்காக போராட இது ஒரு சிறப்பு வாய்ந்த சந்தர்ப்பமாக இருக்கும் என்று டாங் ஜீ கூறினார்.
எப்பொழுதும் ஒவ்வொரு மலேசிய வீரருக்கும் தங்களது சொந்த நாட்டில் விளையாடி வெல்வது கனவு. எனவே நாங்கள் கடினமாக உழைத்து போட்டியில் வெல்வதற்கு முடிந்தவரை முயற்சி செய்வோம்" என்று டாங் ஜீ கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *