எம்.ஏ.சி.சி.க்கு ஒத்துழைப்பு வழங்குவோம்- பூப்பந்து ஆணைய தலைவர் டத்தோ சுப்பிரமணியம்!

- Muthu Kumar
- 04 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 4-
தேசிய பூப்பந்து ஆணையத்தில் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை நடத்தியது தொடர்பாகப் பல்வேறு ஊகங்கள் வெளியாகி வரும் நிலையில் தேசிய பூப்பந்து ஆணையம் மிகவும் வெளிப்படையாக இருக்கும் ஆணையம் என்றும், மூடி மறைக்க இங்கே எதுவும் இல்லை என்றும் அதன் தலைவரான டத்தோ வி. சுப்பிரமணியம் தெரிவித்தார். எம்.ஏ.சி.சி அதன் வேலையைச் செய்கிறது. அதனைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை, மடியில் கனம் இல்லாததால் வழியில் பயமில்லை. இந்த விவகாரம் தொடர்பாக எம்.ஏ.சி.சிக்கு முழுமமையாக நாம் ஒத்துழைப்போம் என அதன் தலைவரான டத்தோ வி. சுப்பிரமணியம் உறுதியளித்தார்.
தற்போது லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் அதன் விசாரணையை மேற்கொள்கிறது. எம்.ஏ.சி.சி அதன் விசாரணையை முடிக்கும் வரையில் நாங்களும் பொறுமையுடன் காத்திருக்கிறோம். தேசிய பூப்பந்து ஆணையத்திடம் உள்ள அனைத்து ஆவணங்களும் வெளிப்படையானதாகவும் நம்பகத்தன்மையுடன் உள்ளதாகவும் விசாரணைக்குப் பின்னர் தெளிவான விளக்கத்தை வழங்குவதாக அதன் தலைவரான டத்தோ வி. சுப்பிரமணியம் உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *