சொந்த மக்களுக்கு முன்னால் மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பையை வெல்வோம் - கேப்டன் ரோமன் பவல்!

top-news
FREE WEBSITE AD

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஒரு காலத்தில் உலக கிரிக்கெட்டில் பெரிய ஆதிக்கம் செலுத்தி பிறகு சரிந்தது. இந்த நிலையில் டேரன் சமி மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒருங்கிணைத்து டி20 கிரிக்கெட் வடிவத்தில் இரண்டு உலக கோப்பைகளை கைப்பற்றி அசத்திக் காட்டினார்.

அவரது ஓய்வுக்கு பின்னர் மீண்டும் வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் சரிந்தது. இந்த நிலையில் 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இது அவர்களின் மதிப்பு வாய்ந்த கிரிக்கெட் பெருமைகளுக்கு மிகப் பெரிய சோகமாக அமைந்தது.

தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் பற்றி அதன் கேப்டன் ரோமன் பவல் பேசும் பொழுது "நான் கேப்டனாக வந்த பொழுது நாங்கள் தரவரிசை பட்டியலில் எட்டு அல்லது ஒன்பதாவது இடத்தில் இருந்தோம். நாங்கள் கிரிக்கெட் தொடர்களை வெல்லாததுதான் இதற்கு காரணம். எனவே நான் கேப்டனாக பொறுப்பேற்றதும் தொடர்களை வெல்ல வேண்டும் என்று கட்டளையிட்டு. நாங்கள் தொடர்களை வெல்லத் தொடங்கினால் நாங்கள் தரவரிசை பட்டியலில் மேலே ஏறுவோம்.

அடுத்து பொருளாதார ரீதியான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டால், யார் வெற்றிகரமாக இருக்கிறார்களோ அவர்களை நோக்கிதான் ஸ்பான்சர்கள் செல்வார்கள். என்னுடைய கேப்டன் பொறுப்பில் எங்களுடைய அணி மேலே வந்தது. எங்களுக்கும் ஸ்பான்சர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள். இதை நான் பெருமையான ஒன்றாக பார்க்கிறேன்.

சொந்த மக்களுக்கு முன்னால் மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு மிகவும் அருமையான ஒன்று. விளையாட்டு வீரர்களான எங்களுக்கு இது ஒரு பாரம்பரியம். நாங்கள்விளையாடி முடித்த பிறகு, நாங்கள் விளையாடிய விதத்தில் இருந்து எங்கள் குடும்பம், எங்கள் குழந்தை மற்றும் பேரக்குழந்தைகள் உத்வேகத்தை எடுக்கலாம்" என்று கூறியிருக்கிறார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *