பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் சீனா தன்னுடைய முதல் தங்கப்பதக்கத்தை வென்றது!

top-news
FREE WEBSITE AD

33 வது ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. 128 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் இல்லாத அளவிற்கு, இம்முறை 206 நாடுகளை சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இருக்கின்றனர்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டு, 2024ம் ஆண்டு ஒலிம்பிக் திருவிழாவை தொடங்கி வைத்தார். இந்த ஒலிம்பிக் திருவிழாவில், அவருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ஸ்டாமர், ஜெர்மன் பிரதமர் ஸ்கோல்ஸ் உள்ளிட்ட தலைவர்களோடு, முக்கிய பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

சனிக்கிழமையான நேற்று 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில், சீனா முதல் தங்கப் பதக்கத்தை வென்று தனது வெற்றிக்கணக்கை தொடங்கி இருக்கிறது.

ின்பு நடைபெற்ற நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில், சீனாவின் ஹுவாங் மற்றும் ஷெங் ஆகியோர், தென் கொரியாவின் கியூம் ஜிஹியோன் மற்றும் பார்க் ஹஜுன் ஆகியோருக்கு களம் இறங்கினர். இந்த போட்டியில் 16 -12 என்ற கணக்கில் முன்னிலை பெற்று சீனா தன்னுடைய முதல் தங்கப்பதக்கத்தை வென்றது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *