பாரிஸ் வில்வித்தை போட்டியில் இந்தியா பதக்கம் வாங்குமா! ஜெயிக்குமா?

- Muthu Kumar
- 21 Jul, 2024
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள இந்திய வீரர்கள் பாரிஸ் சென்றுள்ள நிலையில், பாரிஸில் இருந்து வில்வித்தை பயிற்சியாளரை இந்தியா திரும்ப உத்தரவிட்டிருக்கிறார்கள் அதிகாரிகள்.
சரி என்ன காரணமாம்? அவர் யாரிடமும் பாரிஸ் செல்வதற்கு அனுமதி வாங்கவில்லையாம். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஒப்புதல் கேட்டு சென்றிருக்க வேண்டும் என்று ஆவேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இனி இந்தியா திரும்ப மாட்டேன்.. இது என் வாழ்வில் மிகப் பெரிய அவமானம். நான் என் நாட்டிற்கே சென்று விடுகிறேன் என்று கூறியிருக்கிறார் பயிற்சியாளர்.
இந்திய அணியின் வில்வித்தை பயிற்சியாளராக தென்கொரியாவை சேர்ந்த பேக் வூங் கி இருந்து வருகிறார். ஒலிம்பிக் போட்டிக்காக பாரிஸ் சென்றிருந்த நிலையில், அவர் இந்தியா திரும்புவார் என இந்திய வில்வித்தை சங்கம் அறிவித்துள்ளது. அதாவது அவர் பாரிஸில் தங்குவதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் அளிக்காததால் அவர் அங்கு தங்க முடியாது. இதன் காரணமாகவே இந்திய வில்வித்தை சங்கம் அவரை திரும்ப அழைத்துள்ளது.
இந்நிலையில், அங்கு தங்க அனுமதி கிடைக்காதது தனக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானம் என வில்வித்தை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தனக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியதால், இனி இந்தியா வர விரும்பவில்லை என்றும், சொந்த தாய்நாட்டிற்கு செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆகஸ்ட் 30-ம் தேதியுடன் தனது பதவிக்காலம் முடிவடைவதால் அந்த பதவியில் இனிமேலும் நீடிக்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *