சவுதி புரோ லீக்கில் அல் நாசர் அணி, அல் வேதா அணியை வீழ்த்தியது!

- Muthu Kumar
- 01 Dec, 2024
சவுதி புரோ லீக் போட்டியில் ரொனால்டோ 2 கோல் அடிக்க, அல் நாசர் அணி, அல் வேதா அணியை வீழ்த்தியது.சவுதி அரேபியாவில் புரோ லீக் கால்பந்து தொடர் நடந்து வருகிறது.
மொத்தம் 18 அணிகள் மோதுகின்றன. ரியாத்தில் நடந்த லீக் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கேப்டனாக உள்ள அல் நாசர் அணி, அல் வேதா அணியுடன் மோதியது. போட்டியின் 17 வது நிமிடத்தில் அல் நாசர் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதில் துல்லியமாக கோல் அடித்தார் ரொனால்டோ.
இரண்டாவது பாதியில் அல் வேதா வீரர் பெத்ரேன் கண்மூடித்தனமாக ஆட, 'ரெட் கார்டு' பெற்று வெளியேறினார். போட்டியின் 79 வது நிமிடம் பவுசல் கொடுத்த பந்தை வாங்கிய ரொனால்டோ, இடது காலால் கோல் அடித்தார். கால்பந்து அரங்கில் இவர் அடித்த 915 வது கோல் இது.முடிவில் அல் நாசர் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 25 புள்ளியுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
முதல் இரு இடங்களில் அல் இட்டிஹாத் (30), அல் ஹிலால் (28) அணிகள் உள்ளன.200 வது 'பெனால்டி'கால்பந்து அரங்கில் தனது 200வது 'பெனால்டி' அடித்தார் ரொனால்டோ. இதில் 169 முறை கோல் அடித்துள்ளார். அர்ஜென்டினாவின் மெஸ்சி (142ல் 111 கோல்) அடுத்த இடத்தில் உள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *