தமிழ்ப்பள்ளிகளின் நலனில் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை!
- Thina S
- 20 May, 2024
போர்டிக்சன் – 18 மே,
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் ஏற்பாட்டில் “சமூகமும் தமிழ்ப்பள்ளிகளும்” எனும் கருப்பொருளில் கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் பொருளாதார மேம்பாடுகள் குறித்து இளைஞர்கள் ஆசிரியர்கள் கல்விமான்கள் தமிழ்ப்பள்ளி ஆர்வளர்கள் கலந்துரையாடினர்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 50 பேர் பங்கேற்றதாகவும் தமிழ்ப்பள்ளிகள் குறித்து இம்மாதிரியான கலந்தரையாடல்கள் நடத்தப்படுவதால் தமிழ்ப்பள்ளிகளின் உருமாற்றத்திற்கும் நம்மைப் போன்றவர்கள் பங்களிக்க வேண்டும் என அதன் தேசியத் தலைவர் முருகன் மணியம் வலியுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் பள்ளி மேலாளர் வாரியத்தின் பொதுச் செயலாளரும் தமிழ் அறவாரியத்தின் துணைத் தலைவருமான தமிழ்த்திரு.சுப்பிரமணியம் அவர்கள், கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தமிழ்த்திரு தியாகராஜ் சங்கரநாராயணன், பிரதமர் துறை அமைச்சின் சிறப்பு அதிகாரி ஹமாத் ஓமர் காயிர் பின் சைனூடின் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்ததாகவும் அதன் தேசியத் தலைவர் முருகன் மணியம் வலியுறுத்தினார்.
தற்போதைய நிலையில் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்களைக் களைக்க இம்மாதிரியானக் கலந்துரியாடல்களை இளைஞர் அமைப்புகள் முன்னெடுப்பது பெருமைக்குரியது என கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தமிழ்த்திரு தியாகராஜ் தெரிவித்தார்.

Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *